ஐ.பி.எல்.

IPL 2026 | சென்னை-லக்னோ ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

புள்ளிப் பட்டியலில் சி.எஸ்.கே. 6வது இடத்தில் நீடிக்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 10-ம் தேதி மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

இந்நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று பகல் 12.15 மணிக்கு தொடங்கியது.

ரூ.2,000, ரூ.3,500, ரூ.4,000, ரூ.4,700, ரூ.8,000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

www.chennaisuperkings.com சி.எஸ்.கே. ஆப் மற்றும் www.district.in ஆகிய இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

ஒருவருக்கு அதிகபட்சமாக 4 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் சி.எஸ்.கே. 6வது இடத்தில் நீடிக்கிறது.