மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சஸ் மோதுகின்றன. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சரியாக இரவு 6.15 மணிக்கு ஐபிஎல் 11-வது சீசன் தொடங்கியது. ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தொடங்கி வைத்தார். பாலிவுட் நடிகர் வருண் தவான் ஆடலுடன் கலைநிகழ்ச்சி தொடங்கியது.