ஐ.பி.எல்.

ஐபிஎல் 2026: மும்பை- ராஜஸ்தான் போட்டி மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் டாஸ் போடுவதில் தாமதமாகி உள்ளது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் மோதவுள்ளது. 7 மணிக்கு டாஸ் போடவேண்டிய நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த இரு அணிகள் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் மும்பையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.