ஐ.பி.எல்.

டிராவிஸ் ஹெட் வாணவேடிக்கை: 22 பந்தில் அரைசதம் விளாசினார் | IPL 2026

அபிஷேக் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தாலும், டிராவிஸ் ஹெட் வாணவேடிக்கை நிகழ்த்தி ரன்களை குவித்தார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா 10 பந்தில் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் டிராவிஸ் ஹெட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

டிராவிஸ் ஹெட் வைபவ் அரோரா வீசிய 2-வது ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசினார். சுனில் நரைன் வீசிய 3-வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். கேமரூன் க்ரீன் வீசிய 5-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். வருண் சக்ரவர்த்தி வீசிய 7-வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் விளாசி 22 பந்தில் அரைசதம் விளாசினார்.