ஐ.பி.எல்.

பஞ்சாப் கிங்ஸ்க்கு 236 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் | IPL 2026

இஷான் கிஷன் மற்றும் கிளாசன் அரைசதங்களால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 235 ரன்கள் குவித்துள்ளது.

ஐ.பி.எல். 2026-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவிததது. தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா (35), டிராவிஸ் ஹெட் (38) நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

அடுத்து வந்த இஷான் கிஷன் 32 பந்தில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கிளாசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரும் அரைசதம் அடித்தார். கிளாசன் 43 பந்தில் 69 ரன்கள் அடிக்க, நிதிஷ் ரெட்டி ஆட்டமிழக்காமல் 13 பந்தில் 29 ரன்கள் விளாசினார்.