ஐ.பி.எல்.

அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் | IPL 2026

அபிஷேக் சர்மா 15 பந்தில் அரைசதம் அடிக்க ஐதராபாத் 6 ஓவரில் 75 ரன்கள் குவித்த போதிலும், இறுதியில் 200 ரன்களை தாண்டவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் 2026-ன் 27-வது போட்டி ஐதரபாத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4-வது ஓவரை மெத்யூ ஷார்ட் வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா தொடர்ந்து 3 பவுண்டரி, 2 சிக்சர் விளாசி 15 பந்தில அரைசதம் அடித்தார். அடுத்த ஓவரில் டிராவிட் ஹெட் (23), இஷான் கிஷன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் குவித்தது.

அபிஷேக் சர்மா 22 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8 ஓவரில் 93 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன்பின் கிளாசன் 39 பந்தில் 59 ரன்கள் அடிக்க சென்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே அணி சார்பில் ஓவர்ட்டன் மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா 3 விக்கெட்டும் முகேஷ் சவுத்ரி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.