ஐபிஎல் 2026 சீசனில் 43-வது போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் 9 போட்டிகளில் 6 வெற்றியுடன் 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 7 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும். டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 7-வது இடத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்றாால் 6-வது இடத்திற்கு முன்னேறும்.
இன்றைய போட்டியில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் விளையாடுவது டெல்லி அணியின் பந்து வீச்சை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.