ருதுராஜ் கெய்க்வாட்- ரியான் பராக் 
ஐ.பி.எல்.

IPL 2026 RR vs CSK | நேருக்கு நேர், ஆதிக்கம் செலுத்தியது யார்?

கவுகாத்தியில் நாளை நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழாவில் நாளை கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த நிலையில் இதுவரை இரண்டு அணிகளும் ஐபிஎல் போட்டியில் எதிர்த்து விளையாடியதில் யார் ஆதிக்கம் செலுத்தியது என்று பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை 31 முறை மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே (CSK) 16 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR- Rajasthan Royals) 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2010-ல் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்தது சிஎஸ்கே அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ராஜஸ்தான் ராயல்ஸ் 223 ரன்கள் அதிகபட்சமாக அடித்துள்ளது.

சிஎஸ்கே-வின் குறைந்தபட்ச ஸ்கோர் 109 ஆகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 126 ஆகும்.

2013-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வாட்சன் 101 ரன்கள் அடித்தது தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். சிஎஸ்கே அணிக்காக 2010-ல் முரளி விஜய் 127 ரன்கள் அடித்தது தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

2008-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சோஹைல் தன்வீர் அதிகபட்சமாக 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்தார். 2015-ல் ஜடேஜா சிஎஸ்கே அணிக்காக 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

கடைசி 6 போட்டிகளில் 4-2 என ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னிலை வகிக்கிறது.