ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை தவிர்த்து மற்ற அணிகள் 10 போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் 11 போட்டிகளில் விளையாடியுள்ளன.
இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த நிலையில் 10 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.
நேற்றைய போட்டியில் லஎஸ்ஜி-க்கு எதிராக ஆர்சிபி தோல்வியடைந்ததால் 10 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 10 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
குஜராத் 10 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கே 10 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது. முதல் 6-வது இடத்தில் உள்ள இந்த அணிகளுக்கு இடையில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற கடும் போட்டி நிலவும்.
டெல்லி அணி 10-ல் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
அதேபோல் கேகேஆர் 9 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணி மீதமுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளேஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும். பஞ்சாப் அணிக்கெதிரான போட்டி மழையாமல் கைவிடப்பட்டுள்ளதால் ஒரு புள்ளி கிடைத்துள்ளது. இதன்மூலம் 7 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆகவே, 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளை விட கூடுதல் வாய்ப்புள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லஎஸ்ஜி அணிகள் 10 போட்டிகளில் தலா 3-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணிகள் மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் முடிவை பொறுத்தான் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை எதிர்பார்க்க முடியும்.
இதனால் இனிமேல் வரும் ஒவ்வொரு போட்டிகளிலும் அந்தந்த அணிகளுக்கு முக்கியமானது.
| No | Team | P | W | L | NR | P | RR |
| 1 | SRH | 11 | 7 | 4 | 0 | 14 | 0.737 |
| 2 | PBKS | 10 | 6 | 3 | 1 | 13 | 0.571 |
| 3 | RCB | 10 | 6 | 4 | 0 | 12 | 1.234 |
| 4 | RR | 10 | 6 | 4 | 0 | 12 | 0.51 |
| 5 | GT | 10 | 6 | 4 | 0 | 12 | -0.147 |
| 6 | CSK | 10 | 5 | 5 | 0 | 10 | 0.151 |
| 7 | DC | 10 | 4 | 6 | 0 | 8 | -0.949 |
| 8 | KKR | 9 | 3 | 5 | 1 | 7 | -0.539 |
| 9 | MI | 10 | 3 | 7 | 0 | 6 | -0.649 |
| 10 | LST | 10 | 3 | 7 | 0 | 6 | -0.934 |