ஐ.பி.எல்.

லக்னோவிற்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சு தேர்வு | IPL 2026

லக்னோ 2 போட்டிகளிலும், குஜராத் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஐ.பி.எல். 2026 சீசனில் 19-வது போட்டி லக்னோவில் இன்று மதியம் நடக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

லக்னோ 3-ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் 3-ல் ஒன்றில் வெற்றி பெற்று 7-வது இடத்தில் உள்ளது.