குஜராத் அகமதாபாத்தில் இன்றிரவு நடைபெறும் 46-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் 8 போட்டிகளில் 6-ல் வெற்றி, ஒன்றில் முடிவு இல்லை மூலம் 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் அணி 5 போட்டிகளில் 200 ரன்களை கடந்துள்ளது. ஒரு போட்டியில் 195 ரன்களை சேஸிங் செய்துள்ளது. மற்றொரு போட்டியில் 162-ஐ சேஸிங் செய்துள்ளது.