ஐ.பி.எல்.

சிக்சர் மழை: குஜராத் டைட்டன்ஸ்க்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

பின் ஆலன் 35 பந்தில் 10 சிக்சர்களுடன் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரகுவன்ஷி, க்ரீன் அரைசதம் அடித்தனர்.

ஐ.பி.எல். 2026-ன் 60-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியின் ரகானே, பின் ஆலன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரகானே 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து பின் ஆலன் உடன் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின் ஆலன் 35 பந்தில் 4 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 93 ரன்கள் விளாசினார்.

அடுத்து ரகுவன்ஷி உடன், கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்தனர். ரகுவன்ஷி 44 பந்தில் 82 ரன்கள் எடுத்தும், கிரீன் 28 பந்தில் 52 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்துள்ளது.