ஐபிஎல் 2026-ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் 18-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவால்டு பிரேவிஸ், குர்ஜப்னீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஆகிப் நபி வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் கிடைத்தன. 2-வது ஓவரை முகேஷ் வீசினார். கடைசி இரண்டு பந்துகளையும் சஞ்சு சாம்சன் பவுண்டரிக்கு விரட்டினார். ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாட, சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
3-வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 4-வது ஓவரை அக்சர் படேல் வீசினார். இந்த ஓவரில் கெய்க்வாட் ஒரு பவுண்டரியும், சஞ்சு சாம்சன் 2 பவுண்டரியும் விளாசினர். இதனால் 13 ரன்கள் கிடைத்தன. 4 ஓவரில் 40 ரன்கள் அடித்திருந்தது.
5-வது ஓவரை நடராஜன் வீசினார். இந்த ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரி அடித்தார். 6-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரில் சஞ்சு சாம்சன் இரண்டு பவுண்டரி அடித்தார். இதனால் பவர்பிளேயில் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்துள்ளது. சஞ்சு சாம்சன் 19 பந்தில் 9 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 17 பந்தில் 15 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.