ஐ.பி.எல்.

வந்துட்டார் பதிரனா: தடுமாறும் கொல்கத்தா புத்துணர்ச்சி பெறுமா? | IPL 2026

காயம் காரணமாக கொல்கத்தா அணி விளையாடி தொடக்க போட்டிகளில் பதிரனா இடம் பெறவில்லை.

ஐ.பி.எல். 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது. இது வரை 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. பஞ்சாப் அணிக்கெதிரான போட்டி மழையாமல் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி கிடைத்தது, ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஹர்ஷித் ராணா, பதிரனா போன்ற வீரர்கள் காயம் அடைந்ததுதான். பதிரான டி20 உலகக் கோப்பையின்போது காயம் அடைந்தார். அவர் காயத்தில் இருந்து மீண்டு வர அதிக நாட்கள் எடுத்ததால் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அணியிடம் உடற்தகுதியை நிரூபித்து NOC பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று அணியுடன் இணைந்துள்ளார். கொல்கத்தா இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை. கொல்கத்தா அணி மெடிக்கல் டீம் அவரின் பிட்னஸை மதிப்பீடு செய்யும். இதற்கு இரண்டு மூன்ற பயிற்சி செசன் தேவை. இதனால் இன்றைய போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.

அடுத்த போட்டியில் இருந்து இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. பதிரனா வருகையால் கொல்கத்தாவின் பந்து வீச்சு புத்துணர்ச்சி பெறுமா? என்று பார்ப்போம். நட்சத்திர பந்து வீச்சாளர்களாக சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆதிக்கம் செலுத்த தவறிவிட்டனர்.