ஐ.பி.எல்.

ஆரஞ்ச் தொப்பியை தன்வசமாக்கினார் அபிஷேக் சர்மா | IPL 2026

டெல்லி கேப்பிட்டல்ஸ் கே.எல். ராகுல் 433 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா 10 பந்தில் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ரன்களுடனும் இந்த சீசனில் 10 போட்டிகளில் 440 ரன்கள் குவித்துள்ளார்.

இந்த போட்டிக்கு முன்னதாக கே.எல். ராகுல் 433 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றியிருந்தார். தற்போது அவரிடம் இருந்து அபிஷேக் சர்மா கைப்பற்றியுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் கிளாசன் 414 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். சூர்வன்ஷி 404 ரன்களும், விராட் கோலி 379 ரன்களும் அடித்து அடுத்தடுத்து இடத்தில் உள்ளனர்.