ஐ.பி.எல்.

ஐ.பி.எல். 2026-ல் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அபிஷேக் சர்மா | IPL 2026

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக அபிஷேக் சர்மா 68 பந்தில் 10 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 135 ரன்கள் குவித்தார்.

ஐ.பி.எல். 2026-ல் ஐதராபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பவர்பிளே வரை இருவரும் விக்கெட் இழக்காமல் 67 ரன்கள் சேர்த்தனர். அபிஷேக் சர்மா 25 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் டிராவிஸ் ஹெட் 26 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இஷான் கிஷன் களம் இறங்கினார்.

அரைசதம் அடித்த பின் அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 47 பந்தில் 7 பவுண்டரி, 9 சிக்சருடன் சதம் விளாசினார். இந்த சீசனில் அபிஷேக் சர்மாவின் முதல் சதம் இதுவாகும். மேலும், சதம் கண்ட 4-வது வீரர் இவர் ஆவார்.

சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 115 ரன்களே இதுவரை இந்த சீசனில் ஒரு தனிப்பட்ட பேட்டரின் அதிகபட்ச ஸ்கோரா இருந்தது. இதை இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் அடித்து அபிஷேக் சர்மா முந்தியுள்ளார். அபிஷேக் சர்மா ஸ்கோரில் 10 பவுண்டரி, 10 சிக்சர்கள் அடங்கும்.

டி காக் மற்றும் திலக் வர்மா ஆகியோரும் சதம் அடித்துள்ளனர்.