ஐ.பி.எல்.

IPL 2026 | 11 ஓவராக குறைப்பு: ராஜஸ்தானுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு

மழையால் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டதால் போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

ஐ.பி.எல். 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணி மோதும் 13-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் மழை பெய்ததால் குறிப்பிட்ட நேரத்தில் போட்டி தொடங்கவில்லை. பின்னர் சுமார் 9 மணியளவில் மழை குறைய ஆரம்பித்தது. பின்னர் மழை நின்றது.

இதனால் போட்டி 11 ஓவர்களாக குறைத்து போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

3.2 ஓவர் பவர்பிளே ஆகும். 4 பந்து வீச்சாளர்கள் தலா 2 ஓவர்கள் வீச முடியும். ஒரு பவுலர் 3 ஓவர்கள் வீச முடியும்.