ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: ஒரே மைதானத்தில் அதிக அரைசதங்கள்.. ஏபிடி சாதனையை சமன் செய்தார் சாய் சுதர்சன்

ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் தொடர்ந்து 5 அரைசதங்களை சாய் சுதர்சன் அடித்துள்ளார். சின்னசாமி மைதானத்தில் தொடர்ச்சியாக 5 அரை சதங்களை ஏபி டிவில்லியர்ஸ் அடித்துள்ளார்.

மாலை மலர்

நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. குஜராத் அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும்.

இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சாய் சுதர்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் தொடர்ந்து 5 அரைசதங்களை சாய் சுதர்சன் அடித்துள்ளார்.

இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஒரே மைதானத்தில் தொடர்ந்து அதிக அரை சதங்கள் அடித்த ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை சாய் சுதர்சன் சமன் செய்தார்.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடர்ச்சியாக 5 அரை சதங்களை ஏபி டிவில்லியர்ஸ் அடித்துள்ளார்.

Sai Sudharsan last 5 innings in Ahmedabad 84*, 103, 74, 63, 50*(today)He becomes the 2nd batter to score 5 consecutive 50+ scores in a venue in IPLAb de Villiers was the 1st batter to score in Bengaluru 90*, 68, 69, 70*, 63#IPL #IPL2025 #GTvRR #cricket #staraikelungal