ஐ.பி.எல்.

ஐ.பி.எல் 2025: ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே பந்து வீச்சு தேர்வு

11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.போட்டியில் முதலாவதாக களமிறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்ய உள்ளது.

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில், இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை அணிகள் மோதின. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

இந்நிலையில், இதைதொடர்ந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.

இரு அணிகளுக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி, இந்த போட்டியில் முதலாவதாக களமிறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்ய உள்ளது.

? Toss ?@ChennaiIPL won the toss and elected to bowl against @rajasthanroyalsUpdates ▶️ https://t.co/V2QijpWpGO#TATAIPL | #RRvCSK pic.twitter.com/HFXVecPbCg

SCROLL FOR NEXT