ஐ.பி.எல்.(IPL)

எங்களுடைய பந்து வீச்சு தாக்குதல் மிகவும் சிறப்பானது- கேன் வில்லியம்சன்

எங்களுடைய பந்து வீச்சு மிகவும் சிறப்பானது என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பெருமிதம் கொண்டுள்ளார். #IPL2018 #SRH

மாலை மலர்

அத்துடன் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. எங்களது பந்து வீச்சு மிகவும் அபாரனமானது என்று கேன் வில்லியம்சன் பெருமிதம் கொண்டுள்ளார்.

இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘எங்களுடைய பந்து வீச்சு தாக்குதல் மிகவும் சிறந்ததாக இருந்தது. அதேபோல் பீல்டிங்கும் சூப்பர். நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால், குறிப்பிடத் தகுந்த முத்திரை படைத்துள்ளோம்.

நாம் முன்னதாக விக்கெட் வீழ்த்திவிட்டால், அது சிறப்பானதாக அமையும். ஆடுகளம் ஸ்லோவாக இருந்ததால் பேட்ஸ்மேன் மிகவும் அக்கறை எடுத்து விளையாடவில்லை என்றால் கடினம்தான். ஆடுகளத்தில் அதிக அளவில் ஸ்விங் இல்லை.