சொந்த மைதானமான ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஜொலித்து வருகிறது. இங்கு 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஐந்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி பெரிய ஸ்கோர் ஏதும் எடுக்கவில்லை. 150 முதல் 160 ரன்களுக்குள் எடுத்து எதிரணியை சிறப்பாக மடக்கி வெற்றி பெற்றுள்ளது. அல்லது எதிரணியை 150-க்குள் மடக்கி சேஸிங் செய்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் 118 ரன்னில சுருண்டது. ஆனால், மும்பையை 87 ரன்னுக்குள் சுருட்டி 31 ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. அந்த அணி குறைவான ஸ்கோர்தான் அடிக்கிறது. பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதில்லை என்ற விமர்சன் வந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த விமர்சனத்திற்க அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான டாம் மூடி தக்க பதிலடி கொடுத்துள்ளார். ‘‘நாங்கள் ரோட்டின் மீது விளையாடவில்லை. கடுமையான ஆடுகளத்தில் விளையாடுகிறோம். மோசமானதாக கருதப்படும் 20 முதல் 30 ரன்கள் மதிக்கத்தக்க ஸ்கோர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.