ஐ.பி.எல்.

ஐபிஎல் 2018- நேற்றைய ஆட்டத்தில் ரெய்னா சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் அடித்ததன் மூலம் ரெய்னா சாதனையை முறியடித்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா. #IPL2018 #RohitSharma

மாலை மலர்

இந்த ரன்கள் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக மட்டும் 747 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் கேகேஆர் அணிக்கெதிராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து ரெய்னாவை பின்னுக்குத்தள்ளி முதல் இடம்பிடித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணிக்கெதிராக ரோகித் சர்மா 747 ரன்கள் அடித்துள்ளார். சுரேஷ் ரெய்னா 746 ரன்கள் அடித்துள்ளார். விராட் கோலி 490 ரன்கள் அடித்து ஐந்தாவது இடத்தில் உள்ளார்.