ஐ.பி.எல்.

கேப்டனாக அறிமுகமான ஆட்டத்தில் அதிக ரன்- ஷ்ரேயாஸ் அய்யர் சாதனை

ஐபிஎல் தொடரில் கேப்டனாக அறிமுகமான ஆட்டத்தில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் அய்யர் படைத்துள்ளார். #IPL2018 #DDvKKR

மாலை மலர்

இதனால் ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இளம் வயதில் (23 வயது 142 நாட்கள்) கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட ஷ்ரேயாஸ் அய்யர், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 40 பந்தில் 3 பவுண்டரி, 10 சிக்சருடன் 93 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 219 ரன்னாக உயர காரணமாக இருந்தார்.

கேப்டனாக அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே 93 ரன்கள் எடுத்ததன் மூலம் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் என்ற சாதனையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் ஆரோன் பிஞ்ச் 2013-ல் 65 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது. இதை தற்போது ஷ்ரேயாஸ் அய்யர் முறியடித்துள்ளார். முரளி விஜய் 2016-ல் 55 ரன்களும், ஆடம் கில்கிறிஸ்ட் 2008-ல் 54 ரன்களும் எடுத்தும் சாதனைப் படைத்துள்ளனர்.

தொடர்ச்சியாக மூன்று அரைசதங்கள் விளாசியுள்ள ஷ்ரேயாஸ் அய்யர் குறைந்த போட்டிகளில் 1000 ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார்