ரிஷப் பந்த் அதிகபட்சமாக 48 பந்தில் 85 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரியும், 7 சிக்சர்களும் அடங்கும். அவருக்கு அடுத்தப்படியாக ஷ்ரேயாஸ் அய்யர் 31 பந்தில் 52 ரன் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். சாஹல் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், ஆண்டர்சன், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி வில்லியர்சின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் 39 பந்தில் 90 ரன் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். விராட் கோலி 26 பந்தில் 30 ரன் எடுத்தார். போல்ட், மேக்ஸ்வெல், ஹர்சல் படேல் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
பெங்களூர் அணி 5-வது ஆட்டத்தில் 2-வது வெற்றியை பெற்றது. இந்த வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
கடந்த போட்டியில் நான் அடித்த 90 ரன்னை விட இந்த ஆட்டத்தில் எடுத்த 30 ரன் சிறப்பானது. டி வில்லயர்ஸ் புத்திசாலித்தனமானவர். அவரது ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் எப்போதுமே புன்னகைக்க வைப்பார்.
நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் ஒரு சில பகுதிகளை சரி செய்ய வேண்டியுள்ளது. 60-70 ரன் வரை பார்டனர்ஷிப் நன்றாக இருந்தது. வெல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் கடைசி வரை என்னால் களத்தில் நிற்க முடியவில்லை. நான் அடித்த பந்தை எல்லை கோடு அருகே நின்ற போல்டு கேட்ச் பிடித்தார். இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அது மிகவும் சிறந்த ‘கேட்ச்‘ ஆகும்.
ஐபிஎல் போட்டியில் மட்டும்தான் இதுபோன்ற கேட்ச்சுகளை ஸ்பெஷசலாக பார்க்க முடியும். இப்படியான ஒரு கேட்ச் மூலம் ‘அவுட்’ ஆவதால் வருத்தம் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி அணி 4-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் காம்பீர், கூறும்போது, டி வில்லியர்ஸ் அபாரமாக ஆடி எங்களிடம் இருந்து ஆட்டத்தை கைப்பற்றி விட்டார். 175 ரன் இலக்கு என்பது நல்ல ஸ்கோர்தான் என்றார்.