மும்பை அணி 3 வெற்றி, 6 தோல்வியுடன் இருக்கிறது. ‘பிளே-ஆப்ஸ்’ வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி அந்த அணிக்கு உள்ளது. கொல்கத்தா அணி மும்பையை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
இன்று இரவு 8 மணிக்கு இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் உள்ளது. அந்த அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது. ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 5 தோல்வியுடன் இருக்கிறது. அந்த அணி 4-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.