ஐ.பி.எல்.

6 பவுண்டரி, 4 சிக்சருடன் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார் லோகேஷ் ராகுல்

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிராக 6 பவுண்டரி, 4 சிக்சருடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுல் ஐபிஎல் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். #IPL2018 #KXIP

முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசி லோகேஷ் ராகுல் எதிர்கொண்டார். 4-வது பநதில் சிக்ஸ் விளாசிய லோகேஷ் ராகுல் ஐந்தாவது மற்றும் 6-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது ஓவரை முகமது ஷமி வீசினார். 3-வது பந்தில் சிக்சரும், 4-வது பந்தில் பவுண்டரியும் விரட்டினார்.

3-வது ஓவரை அமித் மிஸ்ரா வீசினார். இந்த ஓவரை லோகேஷ் ராகுல் துவம்சம் செய்தார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ராகுல், 2-வது மற்றும் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அதோடு மட்டுமல்லாமல் 4-வது மற்றும் ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விராட்டினார். இத்துடன் 14 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அத்துடன் ஐபிஎல் சீசனில் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார்.