ஐபிஎல் 11-வது சீசன் நேற்று மும்பையில் தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய 2-வது நாளில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒரு ஆட்டம் மொகாலில் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் டாஸ் சுண்ட, டெல்லி அணி கேப்டன் காம்பீர் ஹெட் என அழைத்தார். ஆனால், டெய்ல் விழ அஸ்வின் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக அஸ்வின் பொறுப்பேற்கும் முதல் போட்டி இதுவாகும்.
டெல்லி அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. காம்பீர் (கேப்டன்), 2. கொலின் முன்றோ, 3. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. கிறிஸ் மோரிஸ், 6. விஜய் சங்கர், 7. டேனியல் கிறிஸ்டியன், 8. அமித் மிஸ்ரா, 9. ராகுல் டெவாடியா, 10. டிரென்ட் போல்ட், 11. மொகமது ஷமி.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்), 2. மயாங்க் அகர்வால், 3. கருண் நாயர், 4. யுவராஜ் சிங், 5. டேவிட் மில்லர், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அக்சார் பட்டேல், 8. அஸ்வின் (கேப்டன்), 9. அன்ட்ரிவ் டை, 10. மோகித் சரமா, 11. முஜீப் உர் ரஹ்மான்.