ஐ.பி.எல்.(IPL)

இதுதான் கேஎல் ராகுலின் சிறந்த ஆட்டம்- ஸ்டாய்னிஸ் புகழாரம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 54 பந்தில் 84 ரன்கள் அடித்ததுதான் கேஎல் ராகுலின் சிறந்த ஆட்டம் என மார்கஸ் டாய்னிஸ் புகழாரம் சூட்டியுள்ளார். #IPL2018 #KLrahul

மாலை மலர்

பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. கிறிஸ் கெய்ல், மயாங்க் அகர்வால் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், தொடக்க வீரர் கேஎல் ராகுல் 54 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தார். இவருக்குத் துணையாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 16 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 23 ரன்கள் அடித்து உதவினார்.

கேஎல் ராகுலுக்கு எதிராக நின்று ஆட்டத்தை ரசித்த ஸ்டாய்னிஸ், கேஎல் ராகுலின் இந்த 84 ரன்கள்தான் ஐபிஎல் சீசனின் சிறந்த ஆட்டம் என்று பாராட்டியுள்ளார்.