ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2018- கொல்கத்தா அணியில் ஸ்டார்க்கிற்குப் பதிலாக டாம் குர்ரான்

மிட்செல் ஸ்டார்க் காயம் அடைந்துள்ளதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் குர்ரான் சேர்க்கப்பட்டுள்ளார். #IPL2018 #KKR

மாலை மலர்

9.4 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்டார்க்கை ஏலம் எடுத்திருந்தது. அவருக்கு இணையான வேகப்பந்து வீச்சாளரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தேடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான டாம் குர்ரானை ஒப்பந்தம் செய்துள்ளது.