ஐ.பி.எல்.

அவர்தான் திட்டமிடுவார், நான் செயல்படுத்துவேன் - டோனி

அவர்தான் வெற்றி பெறுவதற்கான திட்டம் எல்லாம் வைத்திருப்பார். நான் அதை செயல்படுத்துவேன் என்று கேப்டன் டோனி கூறியுள்ளார். #IPL2018 #CSKvSRH #IPLFinal #Dhoni

மாலை மலர்

சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். போட்டியிலும் வெற்றிகரமான கேப்டனாக செயல்படுபவர் டோனி. அவர் 10-வது முறையாக மிகப்பெரிய ஆட்டத்தின் இறுதிப்போட்டியில் ஆடுகிறார். ஏற்கனவே 6 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார். இதில் 2 முறை பட்டம் பெற்றார். 20 ஓவர் உலக கோப்பையில் 2 முறையும், 50 ஓவர் உலக கோப்பையில் ஒரு முறையும் அவர் இறுதிப்போட்டியில் ஆடினார்.

இதில் டோனி 2011 ஒருநாள் போட்டி உலக கோப்பையையும், 2007-ல் 20 ஓவர் உலககோப்பையும் பெற்று கொடுத்தார்.

இன்றைய ஐ.பி.எல். இறுதிப்போட்டி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் சிறந்த இந்திய வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்த தொடர் தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர், ஷிவம் மவி, கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.