ஐ.பி.எல்.

ஐபிஎல் 2018- பாதுகாப்பை மீறி விராட் கோலி காலை தொட்டு செல்பி எடுத்த ரசிகர்

பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கடும் பாதுகாப்பை மீறி விராட் கோலியின் காலை தொட்டு, செல்பி எடுத்தார் பாசக்கார ரசிகர் ஒருவர். #IPL2018 #viratKohli #DDvRCB

மாலை மலர்

ராயல் சேலஞ்சர்ஸ் சேஸிங்கின் போது விராட் கோலி அபாரமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த பாதுகாப்பையும் மீறி விராட் கோலியின் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலியின் அருகில் வந்து காலை தொட்டு வணங்கினார். பின்னர் விராட் கோலியுடன் தயாராக வைத்திருந்த போன் மூலம் செல்பி எடுத்துக் கொண்டார்.