ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2018- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டேவிட் வில்லே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயத்தால் விலகிய கேதர் ஜாதவிற்குப் பதிலாக டேவிட் வில்லே சேர்க்கப்பட உள்ளதாக கவுண்டி அணி தெரிவித்துள்ளது. #IPL2018 #CSK

மாலை மலர்

இந்த போட்டியின்போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவருக்குப் பதிலாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான டேவிட் வில்லே-வை சென்னை அணி மாற்று வீரராக தேர்வு செய்ய இருப்பதாக தெரிகிறது.

இதை இங்கிலாந்து கவுண்டி அணியான யார்க்சையர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே டெல்லி அணியில் யார்க்சையர் வீரர் லியாம் பிளங்கெட் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் வில்லே விளையாட இருக்கிறார்.

இந்த சீசனில் 12 இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் இடம்பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் தொடரில் பெர்த் ஸ்கார்சஸ் அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கும் வில்லே, இங்கிலாந்து அணிக்காக 7-வது இடத்தில் களம் இறங்கி விளையாடி வருகிறார்.