ஐ.பி.எல்.(IPL)

காவிரி விவகாரம்- டோனிக்கு நடிகர் சிம்பு கோரிக்கை

காவிரி தொடர்பாக தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டோனிக்கு நடிகர் சிம்பு கோரிக்கை விடுத்துள்ளார். #CSK

மாலை மலர்

அப்போது சிம்பு கூறுகையில் ‘‘கிரிக்கெட் விளையாடுவது சென்னை மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்குகிறது.

சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் மகேந்திர சிங் டோனி, தமிழக மக்களை நேசிக்கக் கூடியவர். காவிரி பிரச்சினையை அவர் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கு அவர் ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளிக்க வேண்டும். போட்டியை பார்ப்பதற்கு எங்களை முதலில் அனுமதியுங்கள். பின்னர் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்றார்.