இந்த சீசனுக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 30 வயதிற்கு மேற்பட்ட அனுபவ வீரர்களை குறிவைத்து எடுத்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங் மற்றும் அம்பதி ராயுடு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடிய ஷேன் வாட்சன் ஆகியோரை எடுத்தது.
இந்த மூன்று பேரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். யாரும் எதிர்பார்க்காத வகையில் கேப்டன் எம்எஸ் டோனி கடந்த 9 சீசனை விட ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகிறார். இதனால் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 இடங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் ஆக்கிரமித்துள்ளது. அம்பதி ராயுடு 535 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். ஷேன் வாட்சன் 424 ரன்களுடன் 8-வது இடத்திலும், எம்எஸ் டோனி 413 ரன்களுடன் 9-வது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடத்தில் 3 இடங்களை கைவசப்படுத்தியுள்ளனர்.
சென்னை அணி பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதியாக்கியுள்ளதால் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பட்லர், கேஎல் ராகுல் ஆகியோரை இந்த மூன்று பேரும் பின்னுக்குத் தள்ள வாய்ப்புள்ளது.