சரியாக இரவு 7.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட வேண்டும். ஆனால் 7.42 மணிக்குதான் டாஸ் சுண்டப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி டாஸ் சுண்ட, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் ‘டெய்ல்’ என அழைத்தார். ஆனால் ‘ஹெட்’ விழ டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மார்க் வுட், கேதர் ஜாதவ் ஆகியோருக்குப் பதில் ஷர்துல் தாகூர், சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. ரெய்னா, 4. சாம் பில்லிங்ஸ், 5. எம்எஸ் டோனி (கேப்டன்-விக்கெட் கீப்பர்), 6. ஜடேஜா, 7. வெயின் பிராவோ, 8. தீபக் சாஹர், 9. ஹர்பஜன் சிங், 10. இம்ரான் தாஹிர், 11. ஷர்துல் தாகூர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மிட்செல் ஜான்சனுக்குப் பதிலாக டாம் குர்ரான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-