ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டம் புனேவில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சரியாக 7.30 மணிக்கு சுண்டப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி டாஸ் சுண்ட, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகனோ ‘ஹெட்’ என்று அழைத்தார். ரகானே அழைத்தபடி ‘ஹெட்’ விழ ரகானே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா, கரண் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கிளாசன், ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. சுரேஷ் ரெய்னா, 4. சாம் பில்லிங்ஸ், 5. டோனி, 6. ஜடேஜா, 7. பிராவோ, 8. சாஹர், 9. கரண் சர்மா, 10. சர்துல் தாகூர், 11. இம்ரான் தாஹிர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:-
1. ரகானே, 2. சஞ்சு சாம்சன், 3. திரிபாதி, 4. பென் ஸ்டோக்ஸ், 5. கிளாசன், 6. பட்லர், 7. ஸ்டூவர்ட் பின்னி, 8. கே. கவுதம், 9. எஸ். கோபால், 10. உனத்கட், 11. லாஹ்லின்