ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2018- எந்த வரிசையில் ஆடினாலும் அம்பதி ராயுடு ரன் குவிப்பார்- டோனி புகழாரம்

டு பிளிசிஸால் பின்னால் களம் இறங்கிய அம்பதி ராயுடு 24 பந்தில் 41 ரன்கள் குவித்ததால் டோனி புகழாரம் சூட்டியுள்ளார். #IPL2018 #CSK #MSDhoni

மாலை மலர்

பின்னர் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு198 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரி‌ஷப் பந்த் 45 பந்தில் 79 ரன்னும் (7 பவுண்டரி, 4 சிக்சர்), விஜய் சங்கர் 31 பந்தில் 54 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். ஆசிப் 2 விக்கெட்டும், நிகிடி, ஜடேஜா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். சென்னை அணி பெற்ற 6-வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

டு பிளிசிஸ் தொடக்க வீரராக களம் இறங்கியதால் அம்பதி ராயுடு மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டியிருந்தது. வெற்றிக்குப் பின் இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

எங்கள் அணியின் பேட்டிங் நன்றாக இருந்தது. அணியின் ரன் குவிப்புக்கு பார்ட்னர்ஷிப் முக்கியமானது. டு பிளிசிஸ் தொடக்க வீராக களம் இறக்கப்பட்டதால் அம்பதி ராயடு மிடில் ஆர்டரில் (4-வது வீரர்) விளையாடினார். எந்த வரிசையில் ஆடினாலும் அவர் ரன்களை குவிப்பார். அவரால் மிடில் ஆர்டர் மேலும் நிலைத்தன்மை ஏற்பட்டது. எனவே நாங்கள் எடுத்த முடிவு சிறந்ததே.

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீரர் நிகிடி கவரும் வகையில் பந்து வீசினார். பந்துகளை பவுன்சராக போட அவரது உயரம் காரணமாக இருந்தது. எங்களது கடைசி கட்ட பந்து வீச்சு (டெத்ஒவர்ஸ்) மோசமாக இருந்தது. பந்து வீச்சு நன்றாக அமையவில்லை. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் சிறிய ஆடுகளத்தில் இது மாதிரியான பிழைகள் சிறியதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.