ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியின் ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். திரிபாதி, ஷிவம் துபே, விஜய் சங்கர், கெய்க்வாட் என 4 முக்கியமான விக்கெட்களை வீழ்த்தினார். ஒவ்வொரு விக்கெட் வீழ்த்தியபோதும் புஷ்பா பட பாணியில் ஹசரங்கா கொண்டாடினார்.
இந்நிலையில், விக்கெட் வீழ்த்தியதை 'புஷ்பா' பட பாணியில் கொண்டாடியது குறித்து பேசிய ஹசரங்கா, "நான் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அதனால்தான் சிறந்த வீரரான ருதுராஜின் விக்கெட்டை வீழ்த்தியபோது 'புஷ்பா' பட பாணியில் கொண்டாடினேன்" என்று தெரிவித்தார்.
Take a bow RCB blood Wanindu HasarangaPushpa style jhukega nahi?#CSKvsRRRiyan parag♥️ pic.twitter.com/ZpTaIOMmOp