ஐபிஎல் 2026 தொடரில் இன்று கவுஹாத்தியில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த போட்டியில் உடல்நலக்குறைவு காரணமாக விளையாடாத மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, இன்று மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். அவர் வலைப்பயிற்சியில் முழுவீச்சில் பந்துவீசியும், பேட்டிங் செய்தும் தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார்.
இது மும்பை அணியின் மத்திய வரிசைக்கும், பந்துவீச்சுக்கும் கூடுதல் பலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு சீசனில் தோல்வியே சந்திக்காத அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் திகழ்கிறது. ரியான் பராக் தலைமையிலான இந்த அணி, சென்னை மற்றும் குஜராத் அணிகளை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளனர்.
மும்பை அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யுமா அல்லது ராஜஸ்தான் தனது வெற்றிப் பயணத்தைத் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.