ஐ.பி.எல்.

IPL 2026 | டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு: ஆர்சிபி முதலில் பேட்டிங்

புள்ளிப் பட்டியலில் பெங்களூரு 2-வது இடத்தில் நீடிக்கிறது.

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 42-வது லீக் போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, பெங்களூரு அணி முதலில் களமிறங்குகிறது.

புள்ளிப் பட்டியலில் பெங்களூரு 2-வது இடத்திலும், குஜராத் அணி 5-வது இடத்திலும் நீடிக்கிறது.