ஐ.பி.எல்.

டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்கள்: சாதனை படைத்த சாய் சுதர்சன்

குஜராத் சார்பில் சுப்மன் கில், ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன் அரை சதம் கடந்தனர்.

ஐ.பி.எல். தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடந்த 60-வது லீக் போட்டியில் கொல்கத்தா, குஜராத் அணிகள் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 247 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய குஜராத் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் சார்பில் சுப்மன் கில் 83 ரன்னும், ஜோஸ் பட்லர் 57 ரன்னும், சாய் சுதர்சன் 53 ரன்னும் எடுத்தனர்.

இந்நிலையில், குஜராத் அணியின் சாய் சுதர்சன் மற்றொரு வரலாற்று சாதனையைப் படைத்தார்.

டி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் (78 இன்னிங்ஸ்) 3,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனையை சாய் சுதர்சன் படைத்தார்.

ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் 85 இன்னிங்ஸ்களில் 3000 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

SCROLL FOR NEXT