ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 56 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று நடந்த 56-வது லீக் போட்டியில் குஜராத், ஐதராபாத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் குஜராத் அணி 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் பெற்று முதல் இடத்துக்கு முன்னேறியது.
ஐதராபாத் அணி 3வது இடத்தில் நீடிக்கிறது.
ஆர்சிபி அணி 2-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 4வது இடத்திலும், சிஎஸ்கே 5-வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 6-வது இடத்திலும் உள்ளன.
டெல்லி, கேகேஆர், மும்பை, லக்னோ அணிகள் 7, 8, 9 மற்றும் 10-வது இடத்தில் உள்ளன.
இதில் மும்பை, லக்னோ அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறின.