ஐ.பி.எல்.

IPL 2026 | ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் பட்டியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் குஜராத் டைட்டன்ஸ்

ஆர்சிபி அணி 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் போட்டிகள் முடிந்து தற்போது பிளே ஆப் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று தர்மசாலாவில் நடந்த குவாலிபையர் 1 போட்டியில் ஆர்சிபி, குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆர்சிபி அணி 254 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய குஜராத் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆர்சிபி அணி 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

குஜராத் சார்பில் சாய் சுதர்சன் 14 ரன்னும், சுப்மன் கில் 2 ரன்னும் எடுத்தனர்.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். இவர் 15 ஆட்டங்களில் 652 ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இதே அணியின் சுப்மன் கில் 618 ரன்னும், 3வது இடத்தில் ஐதராபாத்தின் கிளாசன் 606 ரன்னும் குவித்துள்ளனர்.

இதேபோல், அதிக விக்கெட் வீழ்த்தியோருக்கான பர்பிள் கேப் பட்டியலில் முதல் இடத்தை ஆர்சிபியின் புவனேஷ்குமாருடன், குஜராத் அணியின் ரபாடாவும் பகிர்ந்துள்ளனர். இருவரும் தலா 26 விக்கெட் எடுத்துள்ளனர். அடுத்த இடத்தில் ராஜஸ்தான் அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் 21 விக்கெட் எடுத்துள்ளார்.