ஐ.பி.எல்.

IPL 2026 | ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 66 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

நேற்று அகமதாபாத்தில் நடந்த 66-வது லீக் போட்டியில் குஜராத், சென்னை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 229 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

குஜராத் சார்பில் சாய் சுதர்சன் 57 பந்தில் 84 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி உள்ளார். இவர் 14 ஆட்டங்களில் 638 ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இதே அணியின் சுப்மன் கில் 616 ரன்னும், 3வது இடத்தில் ராஜஸ்தானின் சூர்யவன்ஷி 579 ரன்னும் குவித்துள்ளனர்.

இதேபோல், அதிக் விக்கெட் வீழ்த்தியோருக்கான பர்பிள் கேப் பட்டியலில் முதல் இடத்தை ஆர்சிபியின் புவனேஷ்குமாருடன், குஜராத் அணியின் ரபாடாவும் பகிர்ந்துள்ளனர். இருவரும் தலா 24 விக்கெட் எடுத்துள்ளனர். அடுத்த இடத்தில் இருக்கும் சென்னை அணியின் அன்ஷுல் கம்போஜ் 21 விக்கெட் எடுத்துள்ளார்.