மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சார்லி, நாம் தமிழர் கட்சி சார்பில் ரஞ்சிதா, அமமுக சார்பில் காலாராணி ஆகியோரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பா.ஜனதா வேட்பாளர் எல். முருகன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 45,000
2. அசையும் சொத்து- ரூ. 84,07,596.54
3. அசையா சொத்து- ரூ. 59,50,000
திமுக வேட்பாளர் கயல்விழி சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 1,15,000
2. அசையும் சொத்து- ரூ. 48,13,831
3. அசையா சொத்து- ரூ. 1,56,00,000
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் முக்கியமான தொகுதி தாராபுரம் தொகுதி (தனி). மாவட்டத்தில் 2-வது தனித்தொகுதியாக உள்ளது. இந்த தொகுதி தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டு 71 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 1917 ஆம் ஆண்டில் நகராட்சியின் அந்தஸ்தை அடைந்து 9.5.1983 முதல் முதல் தர நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.
விவசாயத்தை மட்டுமே முக்கிய தொழிலாக கொண்ட இப்பகுதியில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் பெரிதும் ஆர்வம் காட்டப்பட்டு பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. மேலும் இப்பகுதியில் காற்றாலைகள் அதிகம் உள்ளதால் வளர்ச்சி பாதைக்கு தடையாக இருக்கிறது.
தாராபுரம், கவுண்டச்சி புதூர், நஞ்சயம்பாளையம், தளவாய் பட்டினம் உள்ளிட்ட 16 ஊராட்சிகளையும், மூலனூர், குளத்துபாளையம், ருத்ராவதி, சின்னக்காம்பாளையம் என்ற 4 பேரூராட்சிகளையும், 30 வார்டுகளையும் கொண்டுள்ளது. இங்கு ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதி மிகவும் வறட்சியாக இருப்பதால் இங்கு முருங்கை சாகுபடி அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததால் அரசியல் கட்சியினரும் தொழிற்சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொழிற்சாலை அமைந்தால் மூலனூர், கண்ணிவாடி பகுதியில் உள்ள பலருக்கும் வேலை கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தாராபுரம் உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஏனென்றால் மழை காலங்கள் தவிர மடத்துபாளையம், கெத்தல் ரேவ், தேவராஜபட்டினம் உள்ளிட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு தண்ணீர் தட்டுபாடு ஏற்படும்.
உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தால் அனைத்து காலங்களிலும் தண்ணீர் தட்டுபாடு நீங்கும். இதற்கு தீர்வு காண்பதற்காக ரூ.7.60 கோடி மதிப்பில் வாய்க்கால் வெட்டப்பட்டு சீரமைக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கபடாமல் இருக்கிறது.
இந்த ஆண்டு பெய்த பேய் மழையால் உப்பாறு அணைக்கு தண்ணீர் வந்துள்ளது. இதேபோல் தொடர்ந்து மழை பெய்யுமா என்பது தெரியவில்லை. அதனால் திருமூர்த்தி அணையில் இருந்து ஆண்டுதோறும் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரிகள் இல்லாததால் பலரும் வெளியில் சென்றே படிக்க வேண்டியுள்ளது. தாராபுரம்- கரூர் சாலையில் 53 ஏக்கரில் அமைந்துள்ள நூற்பாலை காமராஜர் திறந்து வைத்து தற்போது மூடப்பட்ட நிலையில் கிடக்கிறது. இதில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, சிப்காட் அல்லது கலைக்கல்லூரி அமைத்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எல்.முருகன், கயல்விழி
தாராபுரம் பஸ் நிலையத்தில் சரிவர பஸ்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். போக்குவரத்து வசதிகள் சரிவர கிடைக்க சோளக்கடை வீதியில் டவுன் பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும். பஸ்கள் குறிப்பிட்ட நேரம் பஸ்நிலையத்தில் நின்று செல்லவும் வழிவகை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். 1951-ம் ஆண்டே பழனி, ஈரோடு, பகுதியில் சர்வே எடுத்து தாராபுரத்திற்கு ரெயில் சேவை கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. ஆனால் இன்றளவும் ரெயில் சேவை கொண்டு வரப்படவில்லை.
விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாடுவதற்கு கூட பொது விளையாட்டரங்கள் இல்லாமல் இருப்பது இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியாக இருக்கிறது. தாராபுரமும் கோவையும் 1917-ம் ஆண்டு நகராட்சி என்ற அந்தஸ்தை ஒரே நேரத்தில் பெற்றது. ஆனால் கோவை இன்று வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தாராபுரம் தனி தொகுதி என்பதால் எந்த வளர்ச்சி திட்டங்களும் இல்லாமல் இன்றும் அடித்தளத்திலேயே இருக்கிறது.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க. 5 முறையும், தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், பா.ம.க. ஒரு முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, இத்தொகுதியில் வாக்காளர்கள் நிலவரம்.
ஆண் வாக்காளர்கள்- 1,25,820
பெண் வாக்காளர்கள்- &1,32,111
திருநங்கைகள்- 10
மொத்த வாக்காளர்கள்- 2,57,941
தேர்தல் வெற்றி
1951- சேனாபதி கவுண்டர்(சுயேட்சை)
1957- சேனாபதி கவுண்டர் (காங்கிரஸ்)
1962- பார்வதி அர்ச்சுனன்(காங்கிரஸ்)
1967- பழனியம்மாள் (தி.மு.க.)
1971- பழனியம்மாள் (தி.மு.க.)
1977- ஆர். அய்யாசாமி(அ.தி.மு.க.)
1980- பெரியசாமி&(அ.தி.மு.க.)
1984- பெரியசாமி(அ.தி.மு.க.)
1989- சாந்தகுமாரி (தி.மு.க.)
1991- ஈசுவரமூர்த்தி(அ.தி.மு.க.)
1996- சரசுவதி(தி.மு.க.)
2001- சிவகாமி (பா.ம.க.)
2006- பார்வதி (தி.மு.க.)
2011- பொன்னுசாமி (அ.தி.மு.க.)
2016- காளிமுத்து (காங்கிரஸ்)
2016 தேர்தல்
வி.எஸ்.காளிமுத்து (காங்கிரஸ்)- 83,538
கே.பொன்னுசாமி(அ.தி.மு.க.)- &73,521
நாகை. திருவள்ளுவன் (ம.தி.மு.க.)- 7,029
மா.சண்முகம் (பா.ஜ.க.)- 7,753
பழனியம்மாள் (கொ.ம.தே.க.)-1,662