குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட்
ஐ.பி.எல்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரிஷப் பண்ட்: உறுதி செய்த பார்த் ஜிண்டால்

குல்தீப் யாதவை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு, அங்கிருந்து ரஷப் பண்ட்-ஐ டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியுள்ளது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். ஆனால், லக்னோ அணிக்காக அவரால் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க முடியவில்லை. இதனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அவரை வெளியிட தீர்மானித்தது.

இது தொடர்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ வாங்க விருப்பம் தெரிவித்தது. அதேவேளையில் லக்னோ அணி குல்தீப் யாதவை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தது.

குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட்

இந்த டீல் நிறைவு செய்யப்பட்டதாக, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரா பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்த் ஜிண்டால் தனது எக்ஸ் பக்கத்தில் "அன்புள்ள குல்தீப், கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் ஆற்றிய சேவைக்கு நன்றி. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கிய அங்கமாக திகழ்ந்த உங்களை நாங்கள் மிகவும் மிஸ் செய்வோம். உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையட்டும். நீங்கள் ஒரு சிறந்த வெற்றியாளர். உங்கள் சொந்த மைதானத்தில் நீங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ரிஷப்- நீங்கள் மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு திரும்பியதில் கிரணும் நானும் மகிழ்ச்சியடைகிறோம். டெல்லியில் உள்ள உங்கள் சொந்த மைதானத்தில் உங்கள் சிறந்த ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.