சூர்யகுமார் யாதவ் 
ஐ.பி.எல்.

IPL 2026: டெல்லி அணி வெற்றிபெற 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை

மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.

ஐ.பி.எல். தொடரின் 8வது லீக் போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார். ரோகித் சர்மா 35 ரன்னும், நமன் தீர் 28 ரன்னும் எடுத்தனர்.

டெல்லி அணி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.