ஐ.பி.எல்.

IPL புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் சரிவு கண்ட டெல்லி

ஆர்சிபி, ஐதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் 2, 3வது இடங்களைப் பிடித்துள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 39 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று நடந்த 39-லீக் போட்டியில் டெல்லி, ஆர்சிபி அணிகள் மோதின. இதில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் ஆர்சிபி அணி 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் நீடிக்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து முதலிடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3வது இடத்திலும் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று 4வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று 5வது இடத்திலும் உள்ளன.

சென்னை அணி 6-வது இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் 7வது இடத்திலும் உள்ளன.

இரு வெற்றி கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் ஆகிய அணிகள் 8, 9 மற்றும் 10-வது இடத்தில் உள்ளன.