ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி 2 பந்தில் 2 ரன்கள் என்ற நிலையில் 5-வது பந்தில் மில்லர் 1 ரன் எடுக்க மறுத்து விட்டார். இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது மில்லர் பந்தை மிஸ் செய்தார். அப்போது கீப்பர் நின்ற பட்லர் ஸ்டெம்பை அடித்து ரன் அவுட் செய்தார். இதனால் குஜராத் அணி 1 ரன் வித்தியாத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் ஓட மறுத்த டேவிட் மில்லரின் எண்ணத்தை தவறென கூறிவிட முடியாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டேவிட் மில்லர் நன்றாக விளையாடி ரன்கள் குவித்ததால், அவரால் தில்லி அணிக்கு வெற்றி பெற்றுத் தர முடியும் என நம்பினார். அவரது அந்த எண்ணத்தை தவறு என்று கூறிவிட முடியாது. இறுதியில் பிரசித் கிருஷ்ணா கடைசி பந்தை மெதுவாக பௌன்சராக வீசியதால், டேவிட் மில்லரால் போட்டியை அணிக்கு சாதகமாக முடித்துக் கொடுப்பது மிகவும் கடினமாக மாறியது. அழுத்தமான சூழலில் இதுபோன்று நடக்கும் என கூறினார்.