ஐ.பி.எல்.

IPL 2026 | ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது சென்னை

பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 33 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. ஆர்சிபி அணி.

நான்கு வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4வது இடத்தில் உள்ளது.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி 5வது இடத்துக்கு முன்னேறியது.

தலா 3 வெற்றி பெற்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் 6, 7-வது இடத்தில் உள்ளன.

இரு வெற்றி மட்டும் பெற்ற மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணிகள் 8, 9-வது இடம் பிடித்துள்ளன.

ஒரே ஒரு வெற்றி மட்டும் பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.